Tuesday, December 2, 2014

jesus is living god

ஜீவனுள்ள தேவன் இயேசு எனபதற்கு நாம் தான் சாட்சி என்பதை மறந்து விட வேண்டாம் இயேசு சொன்னார் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.நாம் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக நற்க்கிரியை செய்ய வேண்டும் ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
நம் அனுதின வாழ்வில் பரிசுத்தம் காணப்பட வேண்டும் உண்மை காணப்பட வேண்டும் நாம் வாழ்வில் காணப்படும் வித்தியாசத்தை புறஜாதிகள் கண்டு இவன் இவள் ஜீவனுள்ள தேனின் பிள்ளைகள் என்று சாட்சி பகிரவேண்டும் நம் வாழ்க்கையின் மூலமாக மற்றவர்கள் சுவிசேசத்தை நம்மிடம் தானாக வலிய வந்து கேட்க்க வேண்டும் அப்படி பட்ட வாழ்வு வாழ வேண்டும் 
    பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
    பரிசுத்த ஆவியை தேவன் நமக்கு தந்தது அந்நிய பாஷை பேசி மகிழ்வதற்கும் துள்ளுவதர்க்கும் அல்ல சாட்சியாய் வாழ அவரை மகிமை படுத்த 
    தேவ பிள்ளைகளே சாட்சியாய் வாழ்வோம் 
    தேவனை மகிமை படுத்துவோம் 

No comments:

Post a Comment