Tuesday, December 2, 2014

பெருமை

நாம் எல்லோரும் பெருமை என்று சொன்னால் தன்னை புகழ்வதும் பணம் இருக்கு அழகு இருக்கு என்று  பெருமை பேசுவது தான் பெருமை என்று நினைத்து கொள்கிறோம் அனால் தேவனை சாராமல் தன சுய முயற்சியால் வாழ்வதும் பெருமையே தேவன் இல்லை என்று சொல்பவர்களும் தங்கள் பெருமையால் தான் அப்படி சொல்கிறார்கள்
கர்த்தருடைய பிள்ளைகள் வாழ்வில் பெருமை எப்படி கிரியை செய்கிறது தெரியுமா ஒழுங்காக ஜெபிப்பது இல்லை வேதம் வாசிப்பது இல்லை ஞாயிறு மட்டும் சபைக்கு செல்வதோடு சரி மற்ற நாட்களில் ஆண்டவருக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு கிடையாது என்ன அர்த்தம் என் சுயத்தின் படி வாழ்வேன் தேவனின் உதவி எனக்கு தேவை  இல்லை அவரின் ஆலோசனையும் தேவை இல்லை என்கிற எண்ணம் இருப்பதாலேயே நம் ஜெபிப்பது இல்லை வேதம் வாசிப்பதும் இல்லை தேவ பிள்ளைகளே அனுதினமும் நாம் தேவனோடு ஜெபத்திலும் வேதம் வாசிப்பதிலும் நேரம் செலுத்த வில்லை என்றால் நாம் வாழ்வில் பெருமைக்கு இடம் கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.யாக் 4:6

No comments:

Post a Comment