Wednesday, December 10, 2014

ஊழியர்களுக்கான அடிப்படை தகுதிகள் 5

வேதாகமத்திலிருந்து

போதகர்களே பொருளாசையை விட்டு வெளியேறுங்கள் !


ஊழியர்களுக்கான  அடிப்படை தகுதிக்கும் பொருளாசைக்கும்  என்ன சம்பந்தம் என்று இதை வாசிக்கும் நீங்கள் கேள்விகள் எழுப்பலாம்!  இன்று பல சபைகள் வியாபார ஸ்தலங்களாகவும் , பல போதகர்களும் ஊழியர்களும் வியாபாரிகளாகவும் மாறிப்போய்விட்ட படியால் இந்த பகுதியில் இதை எழுத வேண்டிய மிகுந்த அவசியமாக கருதினேன். 

இன்று அநேக ஊழியர்கள் பொருளாசைக்காரராக இருப்பதனால் ஆசீர்வாதமே சபைகளில் பிரசங்கமாகவும் கிறிஸ்துவின் உண்மையான போதனைகள் அனைத்தும் இன்று சபைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருவதனாலும் இதனை எழுதுகிறேன். 

  


ஒருவன் கிறிஸ்துவின் சீஷனாக மாறவேண்டும் என்றால், அவனுக்குரிய தகுதி என்னவென்று தெரியுமா ?

லூக்கா 9: 23
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

ஒரு சீடனாக வேண்டுமென்றாலே அவன் தன்னை தான் வெறுக்க வேண்டியிருக்க, போதனாக , ஊழியக்காரனாக இருக்கின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

இன்றைய பல ஊழியர்கள் வியாபாரிகளாக இருக்கின்றனர் . அநேக ஆவிக்குரிய சபைகள் இன்று வியாபார ஸ்தலங்களாக மாறிக்கொண்டு வருகின்றது. சபைகளில் பொருட்கள் விற்பதும், வாங்குவதும் வாடிக்கையான விடயம் ஒன்றாகி விட்ட நிலை இன்று.  சபையை ஒரு வியாபார கண்ணோட்டத்துடன் பல ஊழியர்கள் பார்க்கின்றார்கள். இலங்கை, இந்தியாவில் இருந்து வருகை தரும் பல ஊழியர்கள் விலை பேசியே ஊழியம் செய்ய வருகின்றனர். ( ஒரு சில ஊழியர்களை தவிர்த்து அநேக  ஊழியர்கள் வியாபாரமும் பொருளாசையுமே அவர்கள் இலக்காக இருக்கிறது).




இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவர் சுவிசேஷ ஊழியம் செய்ய அனுப்பும்போது கூறியவைகளை மத்தேயு 10 ஆம் அதிகாரத்திலே வாசிக்கலாம். 
மத்தேயு 10: 8  இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
நீங்கள் கர்த்தருக்கென்று எதை செய்தாலும் அதை இலவசமாகவே செய்யுங்கள். அதிலே பணம் சம்பாதிக்கலாம் எனும் நோக்கத்துடன் செய்யாதிருங்கள். 




இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் விற்பவர்களை மட்டுமல்ல, வாங்குபவர்களையும் என்ன செய்தார் என்று தெரியுமா ?

சபை ஜனங்களே நீங்களும் வியாபாரிகளின் வியாபார தந்திரங்களுக்கு பிடிபடாதிருங்கள். 

லூக்கா 19: 45-46 
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46. என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.




எவ்வளவு ஆஸ்தி இருந்தாலும் அது ஜீவன் அல்ல 
லூக்கா 12: 15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.


தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது
லூக்கா 16: 13 - 15
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

    உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு 
    லூக்கா 18: 22
    இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

    வேதத்தை மறக்க வைக்கும் ஐசுவரியம் 
    மாற்கு  4: 18 
    வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
    விதை விதைக்கிறவன்  உவமையில் 
    ஐசுவரியத்தின் மயக்கம் வேத வசனம் அவர்களுக்குள்ளே கிரியை செய்ய விடாமல் நெருக்கி போடுகிறது என்று சொல்கிறார். அதனால் அவர்கள் பலனற்று போகிறார்கள். 
    இன்றும் அநேக ஊழியர்களும் , விசுவாசிகளும் இந்த ஐசுவரிய மயக்கத்தினால் வேத வசனங்களை புரட்ட வெளிக்கிடுகின்றனர். கிறிஸ்துவின் மனதை இவர்கள் அறியார்கள். கிறிஸ்துவையும் இவர்கள் அறியாமலே போய் விடுகின்றனர். 
    ஊழியர்களே உலக ஐஸ்வரியத்துக்கு உங்களை விலை போக பண்ணாதீர்கள். 

    பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது
    I தீமோத்தேயு 6: 6 -10 
    6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
    7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
    8. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
    9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.
    10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    ஐசுவரியவான்களே, கேளுங்கள்
    யாக்கோபு 5 அதிகாரம் 1-6
    1. ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
    2. உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.
    3. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
    4. இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
    5. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
    6. நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
    http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=299:-5&catid=28:bible-study&Itemid=44

    No comments:

    Post a Comment