ஆண்டவரை ஏற்று கொண்டு இரட்சிக்கப்பட்ட கிருஸ்தவர்களிடம் இக்கேள்வியை கேட்டால் உடனே ஆம் என் பாவம் மன்னிக்க பட்டுவிட்டது என்று உடனே சொல்லிவிடுவார்கள் ஆனால் ஆண்டவர் இதை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார், மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.மத் 6:14,15
ஆண்டவர் சொல்கிறார் நாம் பாவம் அதாவது ரசிக்கப்பட்ட பிள்ளைகளின் பாவம் மநீக்கபடவேண்டும் என்றால் ரட்சிப்பின் பூரணத்தை அடைய வேண்டும் என்றால் பிறர் நமக்கு விரோதமாய் செய்யும் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும் அப்படி மன்னிக்காத பட்சத்தில் நம் பாவங்களை தேவனால் மன்னிக்க முடியாது இன்றைக்கு அநேக கிருஸ்தவர்கள் இந்த பாவத்தில் தான் இருக்கிறார்கள் அவர்கள் தப்பு செய்தால் ஆண்டவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் இந்த பாவத்தை செய்து விட்டேன் என்னை மன்னியும் என்று கெஞ்சுவார்கள் ஆனால் வேறு ஏறாவது அவர்களுக்கு விரோதமாய் பண்ணிவிட்டால் மன்னிக்கவே மாட்டார்கள் இது தேவனின் பிள்ளைகளின் அழகல்ல.நாம் பிறரின் தப்பிதங்களை மன்னித்தல் தான் நம் பாவம் மன்னிக்க படும் அப்படி இல்லை என்றால் நம் பாவம் ஒருபோதும் மன்னிக்க பட மாட்டாது யார் மீதாவது கசப்போ அல்லது மன்னியாமையோ இருக்குமாயின் இன்றே அவர்களை மன்னித்து தேவனோடு ஒப்புரவு ஆகுங்கள்
No comments:
Post a Comment