வேதாகமத்திலிருந்து
தாலந்துகள்
13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
14. அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. 15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். மத்தேயு 25 : 14- 30 |
தேவன் இந்த உவமையை அவருடைய ஊழியக்காரர்களுக்கு சொல்லுகிறார். இதிலே தாலந்து என்று குறிப்பிடுவது விசுவாசிகளை (சபை ஜனங்களை). இயேசுவானவர் தமது சொந்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்டார். அவருடைய ஆஸ்தி (சொத்து) சபை.
கேள்வி
சபை விசுவாசிகள் வளர்வதற்கு நீங்குள் ஊக்கமளிக்கிறீர்களா
சபை விசுவாசிகளை நீங்கள் உருவாக்கி ஊழியத்திற்கு பயிற்சி அளிக்கிறீர்களா?சபை ஜனங்கள் பெருகிறார்களா?
அல்லது
- சபை ஜனங்கள் தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கு நீங்கள் தடைக்கல்லாக இருக்கிறீர்களா?
- உங்களைவிட அவர்கள் வளர்ந்துவிடுவர்கள் என்று அவர்களை முடக்கி வைத்து இருக்கிறீர்களா?
- அல்லது வாழ்நாள் முழுக்க இங்கேயே இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையோடு ஜனங்களை வைத்து இருக்கிறீர்களா?
சபையில் வளர்ச்சியில்லை என்றால், ஜனங்கள் பெருகவில்லையென்றால் தேவன் உங்களைப்பார்த்து :
பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
இது கிறிஸ்து தந்த ஊழியம். இதனை பெருமைக்காகவோ, அல்லது அவலட்சணமான ஆதாயத்திற்காகவோ செய்யாமலும் கிறிஸ்துவின் வருகைக்கிடையில் - இயன்றவரை சுவிசேஷத்தை அறிவித்துவிட வேண்டும்.
தேவன் எப்படி தமது சீடர்களுக்கு கற்பித்து, வழிகாட்டி அவர்களை ஊழியத்திலே பயிற்றுவித்து, அவர்களை ஊழியத்துக்கு அனுப்பினாரோ, அதேபோல சபையிலும் செய்ய வேண்டும்.
அப்படி ஜனங்கள் அனுப்ப-பட்டால் மட்டும்தான் ஊழியம் வளரும்.
http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=286:-4&catid=28:bible-study&Itemid=44
No comments:
Post a Comment