குடிகாரனாய் நடுத்தெருவில் கிடந்தேன் தூக்கிவிட்டு புத்திசொல்ல யாரும் வரவில்லை
புகை பிடித்து புண் ஆகி போனேன் அது தவறென்று சொல்லி திருத்த யாரும் வரவில்லை
கஞ்சிக்கு வழியில்லாமல் கடை வீதியில் கிடந்தேன் பசியாற்ற யாரும் வரவில்லை
வீடில்லாமல் வீதியில் தூங்கினேன் அடைக்கலம் கொடுக்க யாரும் வரவில்லை
பாவங்கள் பல செய்து பாவியாய் பாதை தெரியாமல் அலைந்தேன் பாசம் காட்டி பாதை காட்ட யாரும் வரவில்லை
நோயாளியாய் இருந்தேன் குணமாக்க யாரும் வரவில்லை
பாவம் தொலைக்க கோயிலுக்கு போனேன் திருநீரோடு திருப்பி அனுப்பி விட்டனர்
எங்கு போவது என்று தெரியாமல் தடுமாறி நின்ற போது வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று ஒருவர் சொல்ல அந்த வழி யார் என்று அறிந்து அவரை பின்பற்றினேன் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுதலை ஆக்கி,நல்லவனாக்கி நன்மைகள் பல செய்து ஆசீர்வதித்த இயேசுவோடு நல்லவனாய் நன்றாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது என்னை தேடி வருகிறார்கள் மறுபடியும் பாழாய்ப்போன பாவ வாழ்வுக்கே திரும்பி வா என்று பாதகர்கள் கூப்பிடுகிறார்கள்
என் மேல் பாசம் வைத்து அரவணைத்து ஆசீர்வதித்த இயேசுவை விட்டு எப்படி போவேன் செத்தாலும் அவருக்காகவே சாவேன் வாழ்ந்தாலும் அவருக்காகவே வாழ்வேன் என் இயேசு ஜீவனுள்ள தேவன் கல்லோ மரமோ அல்ல கல்வாரியில் எனக்காய் சிலுவை மரத்தில் ஜீவனை விட்டவர் இன்றும் ஜீவிக்கிறார் எனக்குள்
No comments:
Post a Comment