Tuesday, December 23, 2014

மறுபடியும் பாழாய்ப்போன பாவ வாழ்வுக்கே திரும்பி வா என்று பாதகர்கள் கூப்பிடுகிறார்கள்

குடிகாரனாய் நடுத்தெருவில் கிடந்தேன் தூக்கிவிட்டு புத்திசொல்ல யாரும் வரவில்லை 
புகை பிடித்து புண் ஆகி போனேன் அது தவறென்று சொல்லி திருத்த யாரும் வரவில்லை 
கஞ்சிக்கு வழியில்லாமல் கடை வீதியில் கிடந்தேன் பசியாற்ற யாரும் வரவில்லை 
வீடில்லாமல் வீதியில் தூங்கினேன் அடைக்கலம் கொடுக்க யாரும் வரவில்லை 
பாவங்கள் பல செய்து பாவியாய் பாதை தெரியாமல் அலைந்தேன் பாசம் காட்டி பாதை காட்ட யாரும் வரவில்லை 
நோயாளியாய் இருந்தேன்  குணமாக்க யாரும் வரவில்லை 
பாவம் தொலைக்க கோயிலுக்கு போனேன் திருநீரோடு திருப்பி அனுப்பி விட்டனர் 
எங்கு போவது என்று தெரியாமல் தடுமாறி நின்ற போது வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று ஒருவர் சொல்ல அந்த வழி  யார் என்று அறிந்து அவரை பின்பற்றினேன் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுதலை ஆக்கி,நல்லவனாக்கி நன்மைகள் பல செய்து ஆசீர்வதித்த இயேசுவோடு நல்லவனாய் நன்றாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது என்னை தேடி வருகிறார்கள் மறுபடியும் பாழாய்ப்போன பாவ வாழ்வுக்கே திரும்பி வா என்று பாதகர்கள் கூப்பிடுகிறார்கள் 
என் மேல் பாசம் வைத்து அரவணைத்து ஆசீர்வதித்த இயேசுவை விட்டு எப்படி போவேன் செத்தாலும் அவருக்காகவே சாவேன் வாழ்ந்தாலும் அவருக்காகவே வாழ்வேன் என் இயேசு ஜீவனுள்ள தேவன் கல்லோ மரமோ அல்ல கல்வாரியில் எனக்காய் சிலுவை மரத்தில் ஜீவனை விட்டவர் இன்றும் ஜீவிக்கிறார் எனக்குள்

Monday, December 22, 2014

ஜெபம் prayer

பிசாசும் ஜெபிக்கும் என்று வேதம் சொல்கிறது அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.மாற்கு5:12
நாமும் ஜெபிக்கிறோம் அநேக நேரங்களில் நம்முடைய ஜெபமும் பிசாசின் ஜெபம் போல இருப்பது தான் வேதனை எப்படி என்றால் தன் சொந்த தேவைகளுக்காக என்னை ஆசீர்வதியும் என் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பிள்ளைகளை ஆசீர்வதியும் வீட்டை தாரும் மனைவியை தாரும் என்று நாம் சுயநலமாகவே ஜெபிக்கிறோம் தேவ பிள்ளைகளே நம்முடைய ஜெபம் எப்படி இருக்கிறது நமக்காக மட்டும் தான் தான் ஜெபிக்கிறோமா அப்படி என்றால் பிசாசின் ஜெபத்திற்கும் நம்முடைய ஜெபத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிக்கின்றோமா நம்மை அறிந்த அநேகர் இன்னும் ரட்சிக்கபடவில்லையே அதற்காக ஆத்தும பாரத்தோட ஜெபிக்கிறோமா?கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம். என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள்.இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி நெகேமியா ஜெபித்தான் என்று வேதம் சொல்கிறது நாம் செய்தி வாசிக்கும் போது கேட்க்கும் போது தேசம் பாவத்தினால் பாழாய் போகும் செய்திகளை கேட்க்கும் பொது வாசிக்கும் போது நம் இருதயத்தில் வேதனை உண்டாகி ஆண்டவரே என்று கதறுகிறோமா.மோசே என்கிற தேவ மனிதன் இப்படியாய் கதறுகிறார் என் பெயரை வேண்டுமானால் ஜீவ புஸ்தகத்தில் இருந்து எடுத்துவிடும் இந்த ஜனங்களை அழிக்காதிரும் என்று கதறினாரே அதை போல் நாம் கதறுகிறோமா பவுல் இப்படியாக சொல்கிறார்  இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.தன் சொந்த ஜனங்களின் இரட்சிப்பிற்காக நாம் விண்ணப்பம் பண்ணுகிறோமா கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம் வேதம் சொல்கிறது என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.நம் தேசம் இப்படி ஆசிர்வதிக்க படாமல் இருப்பது அரசியல்வாதிகளால் அல்ல கிறிஸ்தவர்களால் தான் நாம் ஜெபிக்க தவறி விட்டோம் நம் தேசம் ஆசீர்வதிக்கப்பட ரட்சிக்க பட இன்றே திறப்பில் நிற்ப்போம் 

மறுபடியும் பழைய மதத்திற்கு அழைப்பது ஏன்?

மது பழக்கத்திலிருந்து  இருந்து விடுதலை வேண்டி சாமியிடம் போனேன் அவர் படையலில் மதுபானம் 
புகை பழக்கத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவர் படையலிலும் பீடி சிகரெட் 
விபச்சார பாவத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவருக்கு இரண்டு மனைவிகள் 
ஓரினசேர்க்கை பாவத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவர் பிறந்ததே ஓரினசேர்க்கையில் 
கொலை வெறியிலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் சாமியோ கையில் சூலாயுதமும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலையும் 
இச்சையிலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவரோ கன்னி பெண்கள் குளிக்கும் நடுவில் 
எங்கு செல்வது என்று தடுமாறி நிற்கும்போது ஒருவர்  இயேசுவிடம் வா என்றார் போனேன் வேதத்தை வாசித்தேன் ஜெபித்தேன் எல்லா பாவத்திலிருந்தும் என்னை விடுதலை கொடுத்து பரிசுத்தமாக்கினார் ஏனென்றால் அவர் பரிசுத்தர் 
இப்பொழுது சிலர் அதிலிருந்து வா என்கின்றனர் என்னை அவர்கள் மறுபடியும் பாவம் செய்ய அழைக்கிறார்களா  ஏன் நான் நல்லவனாய ,பரிசுத்தமாய் வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னமோ 

Sunday, December 21, 2014

ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி

The Testimony of Brother Sharafuddin


எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.


என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின் (Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன் (Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.

இது, நான் ஆன்மீக‌ மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல‌ பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை (fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.



கடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

எனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம் (Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.

படிப்படியாக எனது சிந்தனை வளர‌ ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லைமற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு "ஆன்மீக அதிருப்தியில்வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.

நான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத் (Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும்பர்து ஐன் (fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கைஎன்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும்அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். “ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்” போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும்உண்மையான அனுபவத்தில் பார்த்தால்இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும்அவருடைய அன்பையும் கிருபையையும் (ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.

வேறுவகையாகச் சொல்லவேண்டுமானால்அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார்! அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih)என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் அன்பும் கிருபையும்” நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும்பிலா காய்பா (bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.

இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள்மற்றும் தக்லிக் (Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. எப்படி? “ என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப (Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்றுஉண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக‌ நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன்ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போதுநாம் நிந்திக்கப்படுவதும்வசைபாடப்படுவதும்,தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போதுநமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் "இது இறைவனின் வார்த்தைகள்இவற்றை நம்பி கீழ்படி! ( These are God’s words, just believe it and obey it!)"என்பது தான். இறுதியாகஅவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய்நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.

இது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால்இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மதுஇஸ்லாமிய போதனையாகிய‌ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரைமுழு இஸ்லாமிய உலகில்எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால்உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால்,அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால்ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள்பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த‌கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும்ஆதாம்ஆபிரகாம்ஈசாக்குமோசேதாவீதுஇயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த (hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்னஇதன் முக்கியத்துவம் என்னபேச முடியாததும்காண முடியாததும்செவி மடுக்க முடியாததும்சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன?

போதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன்எப்படிஎன்று கேள்வி கேட்காமல் (taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும்காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும்செவிடும்ஊமையுமானசுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையாஇது விக்கிர ஆராதனை இல்லையாஇது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா?

இஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான்படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால்,இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க‌ முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்துபின்னர் ஏதாவது ஒரு மத‌ நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.

இவர்களில்இங்கிலாந்திலுள்ள‌ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்படநித்திய வாழ்க்கை,தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில்தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றிநம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.

வெறும் கிறிஸ்தவம் (Mere Christianity)” என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும்அதன் விளக்கமும்வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகுநான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும்நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா (Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.

இறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...
தேவன்தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குஅவரைத் தந்தருளிஇவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 



“For GOD so LOVED the World, that He gave us His one and only Son, so that all who believe in him should not perish (be destroyed) but would have everlasting life..” (யோவான் 3:16).

இதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடுஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது! கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை! கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை.துரதிஷ்டவசமாககுர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத‌ ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டுகிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.

பைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல‌ தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில்அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடுகிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.

மலாய் மொழியில்நாங்கள் "நதியின் மகன் - son of the river (Anak Sungai)", "சாவியின் மகன் - son of the key (Anak Kunci)", "நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும்சாவிக் கொத்தையும்இளம் பிறையையும் குறிப்பிடுகிறதுஅனாக் (Anak) என்ற சொல்லுக்கு மகன் (Son)என்ற பொருள் ஆகும். மகன்” என்ற வார்த்தை வருவதினால்சரீர சேர்க்கையினால் (உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதாஉடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதாஅல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா? இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம்நிச்சயமாக இல்லை!

நாங்கள் சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்” என்றுச் சொல்லக்கூடிய‌ இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்துஅவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள  சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்ச‌னையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.

வெறும் கிறிஸ்தவம்” என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.
கிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால்நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க‌ முடியும். ஆனால்அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடுநாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும்நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவேஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம்அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால். 



"If Christianity was something we were making up, of course we could make it easier and simpler. But it IS NOT. We cannot compete, in simplicity, with people who are inventing religions. How could we? We are dealing with Fact. Of course anyone can be simple if he has no facts to bother about." 

C.S.Lewis, Mere Christianity (New York, The Macmillan Company, 1943, Page 145)

உங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக!

இப்படிக்கு
ஷரபுத்தீன்

---------------------------http://www.answering-islam.org/tamil/testimonies.html----------------

இந்து மதத்தில் கிறிஸ்தவம்?

கடந்த வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266 பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள், சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு நூலை
நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும் வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம்.

திரு. தெய்வநாயகம் தமிழகத்தின் திராவிட இயக்கங்களோடு தொடர்புடையவர். இவர் தமிழகத்தில் காணப்பட்ட ஆதித்திராவிட சமயம் இந்தியாவின் ஆதிக் கிறிஸ்தவமேயல்லாது அதற்கு இந்து சமயத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்துள்ளார். இவ்வாதிக் கிறிஸ்தவம் தமிழகத்தில் தழைக்கத் துணை புரிந்தவர் தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலர் தோமஸ் என்பது இவரது வாதம். இவ்வாதிக் கிறிஸ்தவம் ஒரே தேவனை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய கிறிஸ்தவம் ஒரே தேவனை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய கிறிஸ்தவத்தை எந்தவிதத்திலும் பிரதிபலிக்காது இந்திய கலாச்சார சூழலுக்கு ஏற்ற தனித்தன்மையைக் கொண்டிருந்ததாக இந்நூலாசிரியர் வாதிக்கின்றார். அத்தோடு வடதேசத்து பிராமணர்களே இந்து சமயத்தில் தற்போது காணப்படும் பலவிதமான தகனப் பலிகள், புரோகிதர் முறை ஆகியவற்றை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி தமிழர்களை ஆண்டு வருகிறார்கள் என்றும் வாதிடுகிறார்.
இந்நூலின் முதலாவது பாகம் திரு. தெய்வநாயகத்தின் மேற்குறிப்பிட்ட ஆய்வை விபரிக்கின்றது. அதன் மூன்றாம், நான்காம் பாகங்கள் பிராமணர்கள் எவ்வாறு தமது சமயத்தை தமிழகத்தில் நுழைத்தார்கள் என்று விபரிப்பதோடு அதை ஒழிக்கத் தமிழர்கள் நடத்த வேண்டிய போராட்ட முறையையும் விபரிக்கின்றது.
திராவிட இயக்கங்களும், திரு. தெய்வநாயகமும்
இவரது வாதத்திற்கு நாம் பதில் கூறுமுன் இவருடைய பின்னணி என்ன என்று ஓரளவு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். திரு. தெய்வநாயகம் தமிழகத்தின் முன்னணி அரசியல் சமுதாய இயக்கங்களான திராவிட இயக்கங்களோடு பெருந் தொடர்பு கொண்டவர். அவ்வியக்கங்கள் பெற்றெடுத்த பலவாரிசுகளில் இவரும் ஒருவர் என்று கூறினாலும் தகும். இவ்வியக்கங்களைப் பற்றி சிறிது அறிந்து கொள்வது இந்நூலின் தோற்றத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும். தமிழகத்து திராவிட இயக்கங்களின் தந்தை ஈ. வே. ரா. பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராட எழுந்தது பெரியாரின் திராவிட இயக்கம். பெரியாருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையும், தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியுமாவர். இவ்வியக்கம் பின்னால் கருத்து வேறுபாட்டால் பிரிவடைந்து அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உருவாகியது. ஆரம்ப முதலே இவ்வியக்கங்கள் தமிழர் விடுதலைக்காகப் பாடுபடுவதாக பறைசாற்றிக் கொண்டன. தமிழர்கள் விடுதலை பெற்று தமிழகத்தை ஆளவேண்டுமானால் தமிழ் நாட்டில் பிராமணர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்று இவ்வியக்கங்கள் போராடி வந்தன. பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்கள்; இவர்கள் தங்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் தமிழ் நாட்டில் பரப்பி தமிழர்களை தமக்குக் கீழாகக் கொண்டுவந்து அவர்களை ஆண்டு வருகிறார்கள் என்று இவ்வியக்கங்கள் பிரச்சாரம் செய்தன. தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் காவலர்களாகத் தம்மைக்காட்டி செந்தமிழில் பேசிக் கேட்போரை மயக்கி இறுதியில் பதவியையும் கைப்பற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வியக்கங்களின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு ஒரு காலத்தில் தமிழர்களுக்கு நிச்சயம் புதுவாழ்வு கிட்டத்தான் போகிறது என்று நம்பிய தமிழர்கள் பலர். இவ்வியக்கத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவரே இந்நூலாசிரியர்.
இந்துமதமும், பிராமணர்களும்
பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு இந்துமதம் தடையாக இருந்ததை திராவிட இயக்கங்கள் உணர்ந்திருந்தன. தமிழர்கள் இந்துக்களாக இருக்கும்வரை பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவது என்பது நடவாத காரியம் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனெனில் அனைத்து இந்துமத மடங்களின் ஆதீனகர்த்தாக்களாக பிராமணர்களே இருந்ததுடன், எல்லாக் கோவில் பூசாரிகளாகவும் அவர்களே இருந்தனர். இவ்வாதிக்கத்தை பிராமணர்களிடம் இருந்து அகற்றாதவரை தமிழருக்கு நிரந்தர விடுதலை கிடைக்காதென்பதும் திராவிட இயக்கங்கள் அறிந்திருந்த உண்மை. ஆகவே, பிராமணரின் ஆதிக்கத்திலிருந்து தமிழரை விடுவிக்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டும். இதனால்தான் பெரியார் முதல் அனைத்து திராவிடத் தலைவர்களும் இந்துக்கடவுளர்களைத் தாக்கிப் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர். இவர்களுடைய பிரச்சாரமே ஆதித்திராவிட சமயம் பிராமணீயத்தைக் கொண்டிராத ஒரே கடவுள் கோட்பாடு என்பது. இவர்களுடைய வாதப்படி பல கடவுள் வணக்கமும், மடங்களும், ஆதீனங்களும், பலிகளும், பிராமணீயமும் வடவர் தென்னகத்திற்குக் கொண்டுவந்த வழிமுறைகளாகும். ஆதியில் தமிழர் கொண்டிருந்த கடவுள் வணக்கம் இவைகளை அறியாமலிருந்தது என்பது இவர்களது பிரச்சாரமாக இருந்தது. இவ்வியக்கத்தின் வழிப்படி இவற்றைப் பத்திரிகை வைத்து எழுதி ஆதரித்து வந்தவர் திரு. தெய்வநாயகம்.
இந்து மதமும், சாதிப்பாகுபாடும்
இந்து மதம் மட்டுமல்லாமல் திராவிட இயக்கங்களின் இலட்சியங்களுக்குத் தடையாக இருந்த இன்னுமொரு ஆபத்து சாதிப்பாகுபாடாகும். திராவிட இயக்கங்கள் சாதிப்பாகுபாட்டை வெறுத்தன. இதற்குக் காரணம் அதைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர்கள் வட தேசத்துப் பிராமணர்கள் என்று அவர்கள் நம்பியதுதான். சாதிப்பாகுபாடு இருக்கும்வரை இந்து மதத்தை ஒழிக்க முடியாது என்பது திராவிட இயக்கங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. இந்து மதத்தின் அடித்தளமே ஒருவிதத்தில் சாதிப்பாகுபாட்டு முறைதான். இவை இரண்டும் ஒன்றாக் கலந்திருந்தன. ஒன்றிலிருந்து மற்றொன்றைப்பிரிப்பதென்பது இலகுவானதல்ல. இந்நிலைமையே திராவிட இயக்கங்களைப் பிராமணர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தூண்டின.
கிறிஸ்தவத்தை இந்து மதத்தோடு ஒப்பிடும் திராவிட இயக்கங்களின் ஆய்வுப்பணி
பதவிக்கு வந்த நாட்தொடக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும் சரி அதிலிருந்து விலகி பின்பு திரு. எம். ஜி. ஆரால் அமைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளை நடத்தி தமிழர் தோற்றம், வரலாறு பற்றி ஆராய ஆய்வாளருக்குப் பேரூக்கமளித்தனர். இக்காலத்தில் திராவிட இயக்கங்களின் ஊக்குவிப்பால் கிறிஸ்தவத்தையும் இந்துமதத்தையும் ஒருங்கிணைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதற்குக் காரணம் கிறிஸ்தவம் ஒரே தேவன் என்ற கொள்கையையும், சாதிகளற்ற சமுதாயம் என்ற கோட்பாட்டையும் கொண்டிருந்ததுதான். இது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திராவிட இயக்கக் கொள்கைக்கு மிகவும் ஒத்துப் போவதாயிருந்தது. அதுமட்டுமல்லாது அப்போஸ்தலர் தோமஸ் தென் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்ற வாய்வழிவந்த கொள்கையும் இவர்களுக்குக் கைகொடுத்தது. இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் அப்பாத்துரை, ஞானசிகாமணி, தெய்வநாயகம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். அகஸ்தியர் ஞானம் போன்ற நூல்களும், ஆதிசித்தர்கள் அப்போஸ்தலர்களின் சீடர்கள் என்று சுட்டிக்காட்டும் நூல்களும் இக்காலத்தில் வெளிவந்தன. இவ்வாறாக தமிழாராய்ச்சி மகாநாடொன்றில் கொடுக்கப்பட்ட ஒரு ஆய்வேடே திரு. தெய்வநாயகத்தின் திருக்குறள். சைவசித்தாந்தம், விவிலியம் என்ற நூல். இதற்குப் பதிலளித்து 1995 இல் வெளிவந்த சிறுநூலே திருமறையா? திராவிட சமயமா? என்பது. இந்நூலில் திரு. தெய்வநாயகம் தகுந்த வேத அறிவின்றி எவ்வாறு இந்து சமயத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைக்க முயன்று வேதப் பகுதிகளை சரிவர ஆராயாது திரித்துப் பயன்படுத்தி பல தவறான முடிவுகளுக்கு வந்துள்ளார் என்று எடுத்து காட்டியுள்ளேன். இவரது முடிவுகளுக்கு எந்தவிதமான நிரூபிக்கக்கூடிய வேத ஆதாரங்களோ அல்லது முடிவான வரலாற்று ஆதாரங்களோ இல்லை என்பதையும் இந்நூல் விளக்குகின்றது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது திரு. தெய்வநாயகத்தின் அரசியல், சமுதாயப் பின்னணியை நம்மால் புரிந்து கொள்ள முடிவதோடு அவரது நூலுக்கான நோக்கங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இவரது இப்புதிய நூலை திராவிட இயக்க, சிறுபான்மை இனவிடுதலை இயக்கத் தலைவர்கள் வெளியிட்டு வைத்திருப்பதும் நமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. திரு. தெய்வநாயகமே சென்னையிலுள்ள திராவிட சமய எழுப்புதல் இயக்கத்தின் தலைவராகவும், பிற்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். ஆகவே, கிறிஸ்தவத்தின் அடிப்படையில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் நோக்கத்தில் அல்லாது இனப் பாதுகாப்பு, இனவளர்ச்சி என்ற ஒரே நோக்கத்தில் திராவிட இயக்கங்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் அரசியல், சமுதாயப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவே திரு. தெய்வநாயகம் இந்நூலை வரைந்துள்ளார். இதற்கு இந்நூலின் பிராமண எதிர்ப்புப் போராட்டத்தை வற்புறுத்தும் மூன்றாம், நான்காம் பாகங்களே தெளிவான சாட்சிகளாக இருக்கின்றன. தனது இனவிடுதலைப் போராட்டத்திற்கு பயன்படுமுகமாக கிறிஸ்தவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே இந்நூலாசிரியரது நோக்கம்.
இந்நூலின் பல அம்சங்களுக்கும் நான் ஏற்கனவே பதில் கூறியுள்ளதால் நான்கு முக்கியமான அம்சங்களை மட்டும் மறுபடியும் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.
1. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தின் ஒரு கிளையல்ல.
திரு. தெய்வநாயகத்திற்கு கிறிஸ்தவத்தில் சரியான தெளிவில்லை என்பதை அவர் கத்தோலிக்க மதத்தையும் கிறிஸ்தவத்தையும் ஒன்றாகக் கருதுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவ சமயக்கிளையாக இவர் கருதுகின்றார். இதனை இந்நூலின் 51 ஆவது பக்கத்தில் காணலாம். இதனால்தான் இவர் சிலை வணக்கத்தைக் கொண்டமைந்த ரோமன் கத்தோலிக்க மதத்தை ஒத்ததாகக் காணப்படும் சீரிய கிறிஸ்தவத்தை கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்படுத்தி மனதைக் குழப்பிக் கொள்கிறார்.
கத்தோலிக்க மதம் கிறிஸ்தவம் அல்ல என்பது இன்று வரலாறு தெரியாத அநேகருக்குப் புரிவதில்லை. கத்தோலிக்க மதம் என்றுமே கிறிஸ்தவத்தோடு தொடர்புடையதாயிருக்கவில்லை. கத்தோலிக்க மதத்தின் போதனைகள் அனைத்தும் கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானவை. கத்தோலிக்கர்கள் வேதத்தோடு வேறு பல நூல்களை இணைத்துக் கொண்டுள்ளதோடு, சபையே வேதத்தைவிட அதிகாரமுள்ளது என்று விசுவாசிக்கிறார்கள். கத்தோலிக்க மதம் இரட்சிப்பு கிரியையினால் பெறப்படுகின்றது என்று போதிக்க, கிறிஸ்தவம் இரட்சிப்பு தேவ கிருபையினால் கிடைக்கின்றது என்று போதிக்கின்றது. கத்தோலிக்க மதம் அதன் தலைவரான போப்பையர் தெய்வீக அம்சமுள்ள கடவுளின் பிரதிநிதி என்று போதிக்க, வேதம் அத்தகைய ஆசாரியத்துவ முறையையே வன்மையாகக் கண்டிக்கின்றது. கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்குமிடையில் அடிப்படையிலேயே வேறுபாடிருக்க அது புரியாமல் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்படுத்தி திரு. தெய்வநாயகம் தனது இனவிடுலைப் போராட்டத்திற்கு கிறிஸ்தவத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.
2. எது மெய் கிறிஸ்தவம்?
எது மெய் கிறிஸ்தவம்? என்பதில் நூலாசிரியருக்கு பெரும் மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்த்தரின் கிருபை மட்டுமே எவருக்கும் கிறிஸ்துவைப்பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் அறிவைத் தர முடியும். இயேசு கிறிஸ்து கர்த்தரால் இவ்வுலகிற்கு உலக மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக கல்வாரியில் தன்னைப் பலி கொடுக்க அனுப்பப்பட்டவர். கிறிஸ்து சாதாரண மனிதரல்ல, அவர் தேவ மனிதர். கிறிஸ்துவின் கல்வாரி மரணம் மட்டுமே பாவிகளின் மீது கடவுளுக்கிருந்த தேவ கோபத்தை நீக்கி அவர்கள் பாவநிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்தும். உலகின் சகல ஜாதிகளுக்கும், இனங்களுக்கும் மத்தியில் எந்தவித மாற்றமோ, கலப்போ இன்றி இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்பது தேவ கட்டளை. இந்தக் கலப்பற்ற நற்செய்தியைக் கேட்பதாலும் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதாலும் மட்டுமே எவரும் நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நற்செய்தி ஐரோப்பியருக்கு ஒருவிதமாகவும், இந்தியருக்கு இன்னொருவிதமாகவும், சீனருக்கொருவிதமாகவும் அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவிதத்தில் மாற்றிப் பிரசங்கிக்கப்படக் கூடாது. இதைத்தான் நூலாசிரியர் செய்ய முயற்சிக்கிறார். அவ்வாறு செய்வது தேவநிந்தனையைத்தவிர வேறில்லை.
3. வேதத்தைத் தவிர வேறெந்த நூல்களிலும் கிறிஸ்துவோ, கிறிஸ்தவமோ வெளிப்படுத்தப்படவில்லை.
உலகின் வேறெந்த மதங்களிலும் இயேசு கிறிஸ்துவைக் காணமுடியாது. கிறிஸ்துவின் வேதம் மட்டுமே அவரைப்பற்றி எடுத்துக் கூறும், கர்த்தரால் அருளப்பட்டுள்ள, பூரணமான தேவவார்த்தை. இந்து மத நூல்களில் கிறிஸ்தவத்தைக் காண முயற்சிப்பது கல்லில் நார் உரிக்க முயல்வது போலாகும். ஆதித்திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவ வேதத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கிறிஸ்து தன்னை வேதத்தின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்துகிறார். வேதத்தைத் தவிர வேறெந்த நூல்களிலும், மதங்களிலும் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள முடியும் என்று போதிப்பவர்கள் கிறிஸ்துவின் எதிரிகளும், போலித்தீர்க்கதரிசிகளும் ஆவர். ஆகவே, வீண் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மனதைக் குழப்பிக் கொள்வதைவிட வேதத்தைப் படித்து, பரிசுத்த ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவை அறிந்து, வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளின் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்வது மேலானது.
4. கிறிஸ்தவம் இனச்சார்பற்றது.
இன்று எல்லா இனங்களுக்கும், சாதிகளுக்குமிடையில் ஒற்றுமையை உருவாக்கக் கூடியவர் கிறிஸ்து மட்டுமே. ஏனெனில் கிறிஸ்தவம் இனப்பாகுபாடற்றது. கர்த்தருக்கு முன் சகல இனங்களும் ஒன்றுதான். அவர் எந்த ஒரு இனத்தையும் மேலானதாகக் கருதுவதில்லை. கிறிஸ்து, தமிழருக்கும், பிராமணருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் சொந்தமானவர். அதனால்தான் கிறிஸ்தவர்கள் இன, சாதிப்பாகுபாட்டை வெறுக்கிறார்கள். தமிழினத்திற்கென்று ஒரு கிறிஸ்தவ இறையியலை உருவாக்க முனைவது கிறிஸ்தவத்தை அழிக்க முனையும் “லிபரல்” கொள்கையாகும். ஓரினத்தை மேம்படுத்தி (அது தமிழினமாக இருந்தாலும் சரி) இன்னோரினத்தைத் தாக்குபவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய் கிறிஸ்தவர்கள் எல்லா இனங்களையும் சமமாகவே பாவிப்பார்கள். ஒரு கொடியில் பூத்த மலர்கள் போல் கிறிஸ்தவர்கள் மற்ற இனங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வர். அதற்குக் காரணம் கிறிஸ்து அவர்களது வாழ்க்கையில் செய்யும் அற்புதம்தான். எல்லா இனங்களையும் பாவத்தில் இருந்து விடுவிக்கக் கூடியவர் கிறிஸ்து ஒருவர் மட்டுமே. ஆகவே, கிறிஸ்தவத்தைப் பயன்படுத்தி பிராமணர்களைத் தாக்குவது வேதத்திற்குப் புறம்பான செயல். இதனையே நூலாசிரியர் செய்துள்ளார். இம்மாயமானின் வலையிலிருந்து கிறிஸ்தவர்கள் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவம் தத்துவமோ அல்லது ஒழுக்கத்தைப்பற்றிய ஒரு வெறும் போதனையோ அல்ல. அது உறுதியான மாபெரும் வரலாற்று சம்பவங்களினதும், சத்தியங்களினதும் அடிப்படையில் அமைந்த விசுவாசமாகும். நமது ஆன்மீக அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்திராவிட்டால் அது கிறிஸ்தவமே அல்ல.
- மார்டின் லொயிட் ஜோன்ஸ் 

இரத்த சாட்சிகளான கிரஹம் ஸ்டெயின் மற்றும் இரண்டு மகன்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கிறஸ்தவ குடும்பம் மிஷனரிகளாக ஒரிசாவில் தங்கி ஊழியம் செய்து வந்தார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவு குஷ்டரோகிகளுக்கும், சமுதாயத்தில் துச்சமாக எண்ணப்பட்டவர்களுக்கும் நடுவில் இருந்து கிறிஸ்துவின அன்பை வெளிப்படுத்தி, அங்கு அவர்கள் மத்தியில் 34 வருடங்களாக ஊழியம் செய்து வநதனர். அவர்கள், கிரஹம் ஸ்டெயின் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின் ஆவர்


அவர்களுக்கு ஒரு மகளும். இரண்டு மகன்களும் இருந்தனர்.. 1999-ம் வருடம் ஜனவரி மாதம் 23ம் தேதி இந்தியர்களை தலை குனிய வைத்த நாள். கிரஹம் ஸ்டெயின் தன் மகன்கள் பிலிப்பு (11 வயது), தீமோத்தேயு (6 வயது) அவர்களோடு, ஒரிசாவில் இருந்த காட்டில் தங்கள் ஊழியத்தை முடித்து, இரவில் தங்கள் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு 50 பேர் அடங்கிய அரக்கர் கூட்டம், ஒன்றுமறியாத ஆடுகளைப் போன்று உறங்கிக் கொண்டிருந்த, அந்த களங்கமில்லாத மூவர் இருந்த ஜீப்பின் மேல் கெரோசினை ஊற்றி தீக்கொளுத்தியது.

ஜீப் பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேளை கிரஹம் தன் பிள்ளைகளையாவது விட்டுவிடுமாறு அந்த ஓநாய் கூட்டத்திடம் மன்றாடியிருந்திருப்பார். ஆனால் மூர்க்க வெறிக் கொண்ட அந்தக் கூட்டம் மூவரையும் துடிக்க துடிக்க உயிரோடு எரிந்ததைக் கண்டு ரசித்தது. பாவமறியாத பிள்ளைகள் துடிப்பதைக் கண்டும் அந்த அரக்கர்களின் மனம் இரங்கவில்லை.

அப்போது கிரஹம், தன் பிள்ளைகளை தன் மார்போடு அணைத்தவராக, அந்நாளில் அம்மூவரும் கர்த்தருக்கென்று இரத்த சாட்சிகளாக மரித்தார்கள்.

கிரஹம் மிகவும் தாழ்மையுள்ளவராக, அற்புதமானவராக, மற்றவர்களுடைய குறைகளைக் கேட்டு அதைத் தீர்த்து வைப்பவராக, விசுவாசவீரனாக, தேவனுடைய மனிதனாக வாழ்ந்தவர்.

அவருடைய அடக்க ஆராதனையில், அநேக இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் என்று நாடே திரண்டு வந்திருந்து, அவர்களை கொன்றவர்களை வன்மையாக கண்டிக்கும் வகையில் கூடி, அவர்களை கௌரவித்தனர்.

அப்போது அவரது மனைவியாகிய கிளாடிஸ் ஸ்டெயின் அவர்கள் பேசிய வார்த்தைகள், அநேகருடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சொன்னார்கள், ‘எனக்கு சொல்வதற்கு ஒரே ஒரு செய்திதான் உண்டு, அது என்னவென்றால் எனக்கு யார் மேலும் கசப்பு இல்லை. யாரையும் நான் வெறுக்கவுமில்லை. எனக்கு ஒரே ஒரு பாரம்தான் உண்டு, அது, இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்காக, தங்கள் பாவங்களுக்காக மரித்த இயேசுகிறிஸ்துவின் அன்பை உணர வேண்டும். நாம் வெறுப்பை எரித்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்’ என்று கூறி தன் கணவரையும், தன் இரண்டு சிறிய மகன்களையும் உயிரோடு எரித்தவர்களை ‘மன்னிக்கிறேன்’ என்று மன்னித்தார்களே அங்கு அவர்கள் ‘இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்’ என்று தங்களுடைய நற்கந்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

எந்த ஒரு தாயும் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர்கள் அன்று சொன்னார்கள். அவர்களுடைய 13 வயது நிரம்பிய மகள் எஸ்தரிடம், தகப்பனுடைய இந்த கொடூர மரணத்தைக் குறித்து கேட்டபோது, அவள் சொன்னாள், ‘தமக்காக என் தகப்பன் மரிக்கும்படி என் தேவன் அவரை தகுதியாக எண்ணினாரே அதற்காக அவரை நான் ஸ்தோத்தரிக்கிறேன்’ என்றாள்.

என்ன ஒரு விசுவாச அறைகூவல்!! என்ன ஒரு ஞானமுள்ள வார்த்தைகள்! பெற்றோரின் விசுவாசம் சிறுவயதிலிருந்தே அவளுடைய இருதயத்தில் வேர் கொண்டிருப்பதை அவளுடைய பேச்சின் மூலம் அறியலாம்.

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். - (2 கொரிந்தியர் 2:14-15)

நன்றி Jesus Imchristian

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?


குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்!



சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.


மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதைநாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.

17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch ) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்ன ர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.

அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் "St. A Claus," என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் யிர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ்என்பதை பல்வேறு தாரங்களோடு சுட்டுகின்றார். " நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்லார்.

Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்புவெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது...// http://www.culpeperfamily.com/wp-content/uploads/2012/11/Santa2.jpeg
புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் யின்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.

புனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார்! நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டஅற்புதர் அவர்!

"உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது " என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா? என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக்காரணமானது! ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்யவோ, ஆடை பரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.

அந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள்! மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.// http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f8/Russian_icon_Instaplanet_Saint_Nicholas.JPG
கொடுக்கின்ற தெய்வம்

ஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் "பொத்" தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.

அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம்! தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். "கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது" என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.

அதே போல தனது ரெண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவருடைய பணமுடை அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது! முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோசெல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

மூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை "பொத்" என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.

அவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ்! புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன? யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்!//http://bucultureshock.com/wp-content/uploads/2011/12/Santa-Claus-A.jpg
வழக்கம் பழக்கமானது

அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப்
பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை....இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா! அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளைமகிழ்விக்கச் செய்வது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் சுவீடனில் புனித லூசியாதான் கிறிஸ்மஸ் தாத்தாவாக...ஸாரி பாட்டியாகக் கருதப்படுகிறார்./// http://www.colourbox.com/preview/2695886-274534-happy-santa-claus-with-sack-of-gifts.jpgநன்றி   பைபிளா? குர்ஆனா? இறைவனின் மெய்யான வேதம்?